உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் இடியுடன் பலத்த மழை

திண்டுக்கல்லில் இடியுடன் பலத்த மழை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.திண்டுக்கல்லில் சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை , இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதலே வெயில் அடித்தாலும் மதியம் 1:00 மணிக்கு மேல் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்தது. மாலை 6 :00 மணி வரை லேசான துாறல் விழுந்த நிலையில் இரவு 7 :00 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்று ,இடியுடன் கொட்டத்தீர்த்த மழையால் சாலையில் நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்துஓடியது.தொடர்ந்து இரவு இரங்களில் பெய்யும் மழையால் வெயிலான் ஏற்படும் உஷ்ணம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ