உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

எரியோடு: எரியோடு அன்னசமுத்திரத்தில் ஆதிவிநாயகர், காளியம்மன், புற்று மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.மே 31 மாலை தீர்த்த அழைப்புடன் துவங்கிய இவ்விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் அர்ச்சகர் ஜவஹர் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, கவுன்சிலர் பார்த்திபன், நாகையகோட்டை ஊராட்சி தலைவர் செந்தில் வடிவு இளங்கோ, துணைத்தலைவர் வீரப்பன், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி