மேலும் செய்திகள்
யானையை வனத்துக்குள் அனுப்பிய வனத்துறை
17 minutes ago
ரயிலில் இருந்து விழுந்தவர் பலி
24 minutes ago
இன்று இனிதாக....
33 minutes ago
மாநில பூப்பந்தாட்ட போட்டி துவக்கம்
36 minutes ago
வடமதுரை: வடமதுரை கொம்பேறிபட்டி அருகே ஊரானுாரில் வெற்றி விநாயகர், சவுந்தரராஜப் பெருமாள், காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சக தேவராஜ் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், ஊராட்சி தலைவர்கள் ராஜரத்தினம், முனியப்பன், மாவட்ட கவுன்சிலர் தண்டாயுதம், ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி நீலக்கண்ணன், ஊர் நிர்வாகி அழகர்அம்பலம், ஊராட்சி துணைத் தலைவர் கருப்பையா, வார்டு உறுப்பினர்கள் பெரியசாமி, முருகலட்சுமி பங்கேற்றனர்.சின்னாளபட்டி :அம்பாத்துறை அருகே கதிர்பட்டியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள், வீருமல்லம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு, கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்ற மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.
17 minutes ago
24 minutes ago
33 minutes ago
36 minutes ago