| ADDED : ஆக 12, 2024 04:51 AM
எரியோடு, : உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் மனவளக் கலை யோகா பயிற்சியை கிராம மக்களுக்கு 6 மாத காலம் இலவசமாக கற்று தரும் நோக்கில் கிராமிய சேவைத் திட்டம் துவங்கியது. 338 கிராமங்களில் இத்திட்டம் ஆரம்பித்து 319 கிராமங்களில் முடிந்தது. தற்போது 339வது கிராமமாக எரியோடு நாகையகோட்டை அன்னசமுத்திரம் தேர்வாகி அதன் துவக்க விழா நடந்தது. தலைவர் மயிலானந்தன் காணொலி காட்சி மூலம் துவக்கினார். துணைத்தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். மண்டல துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். இயக்குனர் பெருமாள், இணை இயக்குனர் பாலமுருகன், துணைத்தலைவர் தங்கவேலு, ஒருங்கிணைப்பாளர் குருரங்கதுரை முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் பழனிசாமி, துணைத் தலைவர் சீதாராமன், ஊராட்சி தலைவர் செந்தில்வடிவு இளங்கோவன், துணை தலைவர் ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன், நாகையகோட்டை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி பங்கேற்றனர்.