உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்

குடிநீர் சப்ளையில் சிக்கல்

குறவன்பாறை பகுதியில் வசிக்கும் குடியிருப்போருக்கு குடிநீர் சப்ளை நீண்ட நாள் இடைவெளியில் வருகிறது. இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -மகேஷ், பழநி.

நடவடிக்கை எடுக்கப்படும்

ஒட்டுமொத்தமான பழநி நகரின் பிரச்னையாக இது உள்ளது. எனவே நகராட்சி கூட்டத்தில் ஆலோசித்து பிரச்னைக்கான தீர்வு காணப்படும்.- --விமலபாண்டியன், கவுன்சிலர், பழநி

தெருவிளக்கு தேவை

தருமத்துப்பட்டி ஊராட்சி அலுவலகம் முதல் பஸ் ஸ்டாப் வரையான பகுதிகளில் போதிய தெருவிளக்கின்றி இருள் நிலவுகிறது. இதனால் விபத்து அபாயம் பெருகியுள்ளது. மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -சரவணன், தருமத்துப்பட்டி

மின்விளக்கு பொருத்தப்படும்

ஆய்வுக்கு பின் தேவையான இடங்களில் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.- -மருதமுத்து, ஊராட்சி தலைவர், தருமத்துப்பட்டி

சேதமடைந்த ரோடு

வேடசந்துார் நேருஜி நகர் பூங்கா ரோட்டில், புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் அடுத்துள்ள பகுதியில் உள்ள ரோடானது மேடு, பள்ளமாக உள்ளது.இதை சீரமைத்து புதிய தார் ரோடு அமைத்து தர வேண்டும்.-சந்திரசேகர், வேடசந்துார்

விரைவில் சீர்படுத்தப்படும்

புதிய ரோடு பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் சீரமைக்கப்படும்.-மேகலா, பேரூராட்சி தலைவர், வேடசந்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்