உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லொள்ளு தொல்லை தாங்கல: கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்

லொள்ளு தொல்லை தாங்கல: கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்

மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த மக்களும் குரல் எழுப்பியும் எதையும் கண்டுக்காது உள்ளாட்சி துறை வேடிக்கை பார்க்கிறது .மாவட்டத்தில் நகர், புறநகர், கிராமப் பகுதி ரோடு தெருக்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதை கண்டாலே மக்கள் பதறும் நிலை தொடர்கிறது . ரோடுகளில் படுத்திருக்கும் நாய்கள் டூவீல வாகன ஓட்டிகளை கண்டாலே விரட்டி விரட்டி கடிக்க பாய்கிறது . தனியாக நடந்து செல்வோரை கண்டாலே துரத்துவது,கடித்து குதறுவது ஏன நாய்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.தினம் தினம் ஒன்று முதல் ஐந்து பேர் வரை அந்தப்பகுதி மருத்துவமனைக்கு நாய்கடியால் சிகிச்சை பெற வருகின்றனர்.நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தாலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய உள்ளாட்சிகள் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் மக்களின் அலறலை கண்டுக்காமல் உள்ளது.இதுஒரு புறம் இருக்க சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் அதிகம் நடக்கிறது. பஸ் , ரயில் ஏறுவதற்காக வேகமாக வரும் பயணிகளையும் நாய்கள் விரட்டி கடிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.கிராமப்புறங்களில் கோழி, ஆடு, மாடுகளையும் நாய்கள் கடித்து கொன்று விடுகின்றன.குறிப்பாக சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இப்படி நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathish kumar
ஜூலை 30, 2024 10:16

முதல்ல நம்ம வந்து வண்டி ஓட்டுறப்போ அதிகமான வேகத்துல வண்டி ஓட்டி இந்த மிருக ஜீவன்களை இடிச்சு நம்ம வந்து விபத்துக்குள்ளாச்சி அதன் வந்து சாவடிக்கிறோம் இதை நம்ப தவிர வந்து நம்மள கிடையாது வண்டி விரட்டாத எல்லா விலங்கையும் நம்பவும் நேசிக்க தெரிந்து கொள்ள வேண்டும்


bala krishnan
ஜூலை 25, 2024 19:57

பகுத்தறிவு மிருககங்களின் தொல்லைதான் தாங்கமுடியவில்லை பகுத்தறிவு மிருகங்களால் எப்போது என்னநடக்கும் என்று அச்சமாக உள்ளது.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை