உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மக்கர் செய்யும் அரசு பஸ்கள்

மக்கர் செய்யும் அரசு பஸ்கள்

திண்டுக்கல், : திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களை ஏற்றி செல்ல வந்த அரசு பஸ் ஸ்டார்ட் ஆகமாக நிற்க மாணவர்கள்'ஐலேசா'போட்டு ஸ்டார்ட் செய்ய வைத்தனர்.திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியிலிருந்து மருத்துவமனைக்கு வந்து செல்ல அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று காலை 11:00 மணிக்கு மருத்துவமனை வந்த பஸ் ஸ்டார்ட் ஆகாமல் நின்றது. மாணவர்கள் கீழே இறங்கி 'ஐலேசா' போட்டப்படி தள்ள ஸ்டார்ட் ஆனது. திண்டுக்கல் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் பழுதான பஸ்சை ஆய்வு செய்து பழுதை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்படிதான் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பது வாடிக்கையாகிறது . 150 புதிய பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் கூறும் என்ற நிலையில் அந்த பஸ்கள் எங்கே என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை