உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு வேலைக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

அரசு வேலைக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

செம்பட்டி: 'அரசு துறை வேலை வாய்ப்பிற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.சொக்கலிங்கபுரம், போடிக்காமன்வாடி, கூலம்பட்டியில், சமுதாயக்கூடம், அங்கன்வாடி, ரேஷன் கடை, உணவு தானிய கிட்டங்கி கட்டடங்களை திறந்து வைத்து அவர் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் , திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடையும் வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். படித்த இளைஞர்களுக்கு அரசு துறை வேலை வாய்ப்பிற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது சொக்கலிங்கபுரம் வழித்தடத்தில் விரைவில் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) கருப்புசாமி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மகேஸ்வரி, பி.டி.ஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, அருள்கலாவதி முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை