உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முத்துமாரியம்மன் கோயில் தெப்பவிழா

முத்துமாரியம்மன் கோயில் தெப்பவிழா

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் தெப்பத்தேரோட்டம் நடந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் தண்ணீர் நிரப்பி தெப்பக்குளம் போல் உருவாக்க முத்துமாரியம்மன் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருப்பணி குழு சார்பில் நடந்த அன்னதானத்தை அறக்கட்டளை நிர்வாகி அருள்மெர்சி செந்தில்குமார் துவங்கி வைத்தார். திருப்பணிக்குழு தலைவர் அன்பு, தி.மு.க., மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ