உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / n பொது மக்கள் பயன்படுத்தும் இ--சேவை மையங்களில் n மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாமே

n பொது மக்கள் பயன்படுத்தும் இ--சேவை மையங்களில் n மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாமே

மாவட்டம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் மக்களுக்கு பல்வேறு சேவைகளும் இணைய வழியாக வழங்கப்படுகின்றன. பிறப்பு, இறப்பு, வருவாய், வாரிசு சான்றுகள் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளும், ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இந்த மையங்களிலிருந்து மக்கள், தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெறுகின்றனர். வாங்கும் கட்டணத்திற்கு முறையான ரசீதும் வழங்கப்படுவதில்லை. ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது. எந்த சான்றாக இருந்தாலும் குறைந்தபட்சம் ரூ.100 கட்டணம் வசூலிக்கின்றனர். அரசுக்குச் செலுத்தப்படும் ரூ. 50 மட்டுமே ரசீது தரப்படுகிறது. புதிய மின் இணைப்புக்கு ஆவணங்களை ஸ்கேன் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க ரூ.1000 வரை கட்டணமாகப் பெறப்படுகிறது. இவ்வளவு தொகையா என்று மக்கள் கேட்டால், வேறு எங்கையாவது விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறி மறுப்பதும் பல இடங்களில் நடக்கிறது. இதன்மீது முறையாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை