உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எம்.வி.எம்.நகர் பெருமாள் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாணம்

எம்.வி.எம்.நகர் பெருமாள் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாணம்

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.எம். நகரிலுள்ள தென்திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் நாளை (மார்ச் 24) பங்குனி உத்திர திருக்கல்யாண நடக்கிறது. பங்குனி உத்திர விழாவையொட்டி கோயில் வளாகத்தில் இறைப்பணி குழுவினர்கள் சார்பில் பக்தர்களின் வசதிக்காக 120 அடிநீள பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9:30 மணி முதல் 11:30 மணிக்குள் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாளின் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெறுகிறது .நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருக்கல்யாணத்தை யொட்டி கோயில் வளாகம் புதுப்பொலிவுடன் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை