உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிராமசபை நடத்துவதில் கோஷ்டி; அலைக்கழிப்பால் தருமத்துப்பட்டி மக்கள் அவதி

கிராமசபை நடத்துவதில் கோஷ்டி; அலைக்கழிப்பால் தருமத்துப்பட்டி மக்கள் அவதி

கன்னிவாடி : தருமத்துப்பட்டியில் ஊராட்சியில் கோஷ்டி பூசலால் தலைவர், செயலர் பங்கேற்காத நிலையில் துணைத்தலைவர் கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் தருமத்துப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தை கவனிப்பதில் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் சிலர் ஒரு பிரிவாகவும், ஊராட்சி செயலர் இன்னாசி மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஊராட்சி அலுவலகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மெயின் ரோட்டில் தனி அலுவலகம் அமைத்து ஊராட்சி செயலர் வரி வசூல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகிறார்.இச்சூழலில் கலைஞர் கனவு இல்ல திட்டம் குறித்த சிறப்பு கிராமசபையை நேற்று நடந்த நிலையில் தருமத்துப்பட்டி ஊராட்சியில் இருவேறு இடங்களில் கிராமசபை நடத்த உள்ளதாக தகவல் பரவியது.காலை 11:00 மணிமுதல் மனு கொடுக்க ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மதியம் 12:50மணிக்கு துணைத்தலைவர் கிருஷ்ணன் செவனக்கரையான்பட்டி ரோட்டில் உள்ள கலையரங்க கட்டடத்தில் கூட்டத்தை துவக்கினார். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் அங்கு வந்தார். ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பங்கேற்ற நிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர், ஊராட்சி செயலாளர் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை