உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்

ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர் பாலசுப்பிரமணி வரவேற்றார். மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, வேடசந்துார் முன்னாள் வட்டாரத் தலைவர் நடராஜன், வட்டாரத் தலைவர் தண்டபாணி, மாவட்டத் துணைத் தலைவர் நாராயணசாமி, மாவட்ட செயலாளர் செல்வராஜ் பேசினர். குறைந்தபட்ச பென்ஷனாக ரூ.6750 வழங்க வேண்டும் ,ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு திட்டத்தில் ஓய்வூதியர்களை இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை