உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடுகளில் சுற்றும் கால்நடைகளால் அல்லாடும் மக்கள்...

ரோடுகளில் சுற்றும் கால்நடைகளால் அல்லாடும் மக்கள்...

விபத்துக்களை ஏற்படுத்தும் கால்நடைகள்திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ரோட்டின் குறுக்கே இவைகள் செல்வதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். கால்நடைகளை ரோட்டில் விடுவதை தடுக்க வேண்டும். மகேஸ்வரி,திண்டுக்கல்.-------........கழிவுநீரால் சுகாதாரக்கேடுஒட்டன்சத்திரம் நகராட்சி சம்சுதீன் காலனி 2வது தெருவில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாக்கடையை அடிக்கடி சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகமது இஸ்மாயில்,ஒட்டன்சத்திரம்........--------அச்சத்தை ஏற்படுத்தும் புதர்கள்கொடைக்கானல் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாக சுவர் சேதமடைந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது. இது சமூக விரோதிகள் கூடாரமாகவும், விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபால், கொடைக்கானல்.----------........கொசு உற்பத்தியாக்கும் கழிவுநீர்நத்தம் கோவில்பட்டியிலிருந்து கல்வேலிபட்டி செல்லும் ரோட்டின் மேம்பாலத்திற்கு கீழ் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறி வருகிறது. தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.ராகவன், நத்தம்.----------.......சேதமான தண்ணீர் தொட்டிதிண்டுக்கல் பாறைப்பட்டியில் தண்ணீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. பயன்பாடின்றி உள்ள தண்ணீர் தொட்டியால் மக்கள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர். போர்வெல்லை சரி செய்து தண்ணீர் தொட்டியை புதிதாக அமைக்க வேண்டும். ஆசைதம்பி,பாறைப்பட்டி.---------.......நுங்கு கழிவுகளால் சீர்கேடுதிண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் நுங்கு கழிவுகளை கொட்டி குவித்துள்ளனர். மழை நேரத்தில் இங்கு தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. ரோட்டோரத்தில் நுங்கு கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். மாரிமுத்து, திண்டுக்கல்.----------........தொற்று பரப்பும் கழிவுநீர்நத்தம் கம்பிளியம்பட்டியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி ஆங்காங்கே நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இங்கு சாக்கடை கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெ.பாஸ்கரன், சுக்காம்பட்டி.---------..........................................................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை