உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்

திண்டுக்கல்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல்லிலிருந்து வெளி மாவட்டத்திற்கு மக்கள் ஓட்டளிக்க செல்வதால் பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.லோக்சபா தேர்தல் இன்று நடக்க உள்ளநிலையில் வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு ஓட்டளிப்பதற்காக செல்கின்றனர். இதேபோல் திண்டுக்கல்லில் பணியாற்றும் வெளி மாவட்ட மக்கள் திருச்சி,மதுரை,சென்னை.திருநெல்வேலி,நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்காக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்களில் குவிந்தனர். பஸ் வசதிகள் அதிகளவில் இல்லாததால் பயணிகள் பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஒருசிலர் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்து பயணத்தை மேற்கொண்டனர். குறைந்தளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் அதிகமான மக்கள் பயணிக்க முடியாமல் பஸ்ஸ்டாண்டிலே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நேரங்களில் அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் சென்னை,கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் செல்லும் 3,4வது பிளாட்பாரங்களில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ