உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள்..........

போலீஸ் செய்திகள்..........

நில பிரச்னை:இருவர் கைதுவேடசந்துார்: முருநெல்லிக்கோட்டை கிருஷ்ணகவுண்டனுாரை சேர்ந்தவர் விவசாயி கண்ணகி 44. அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 42. கால்நடைகளை மேய்ப்பதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்தது. இந்நிலையில் கண்ணகி,கிருஷ்ணமூர்த்தியை தாக்க முயன்றதாகவும், கிருஷ்ணமூர்த்தி கண்ணகியை தாக்கியதாகவும் இரு தரப்பினரும் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் கண்ணகியின் தங்கை மாதவி 32, எதிர்தரப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்தார். கண்ணகியை தேடுகின்றனர்.கடைக்காரருக்கு அரிவாள் வெட்டுநத்தம்: -நத்தம் உலுப்பகுடியை சேர்ந்தவர் கண்ணன் 46. இவர் உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே கடை நடத்துகிறார். இவரது சித்தப்பா சண்முகம் 65, இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் சண்முகத்தின் தோட்டத்தில் கண்ணனின் கோழிகள் மேய்ந்தது. இதைப்பார்த்த சண்முகம்,ஆத்திரித்தில் கண்ணனை அரிவாளால் இடது காலில் வெட்டியனார். நத்தம் போலீசார் தலைமறைவான சண்முகத்தை தேடுகின்றனர்.விபத்தில் காயம்குஜிலியம்பாறை: மல்லப்புரம் ஊராட்சி பல்லாநத்தத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி 41. கரூர் மாவட்டம் ஈசநத்தத்திலிருந்து குஜிலியம்பாறை ரோட்டில் காரிபட்டி பிரிவு அருகே டூவீலரில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின் தலையில் அடிபட்டு மயங்கினார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை