உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் சிக்னல் கம்பம் சரிந்து தொழிலாளி பலி

போலீஸ் சிக்னல் கம்பம் சரிந்து தொழிலாளி பலி

கொடைக்கானல்,:கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் போலீஸ் அவுட்போஸ்ட் அருகே போக்குவரத்து போலீஸ் சிக்னல் கம்பத்தில் நில விற்பனை சம்பந்தமான தனியார் விளம்பர பதாகை அதிக பாரத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு முதல், தொடர் சாரல் மழை, சூறைக்காற்று வீசியது. சிக்னல் கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்த நிலையில் வலு விழுந்து இருந்தது. நேற்று காலை கூலித் தொழிலாளிகளான கொடைக்கானல் தெரசா நகரை சேர்ந்த தாஸ், 55, நாயுடுபுரம் சின்னப்பள்ளத்தை சேர்ந்த சுரேஷ், 40, ஆகியோர் இலைகட்டுகளை விடுதிகளுக்கு சப்ளை செய்ய தள்ளுவண்டியில் எடுத்து வந்தனர்.அப்போது விளம்பர பதாகையுடன் கூடிய டிராபிக் சிக்னல் கம்பம் இவர்கள் மீது விழுந்தது. இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், கொடைக்கானல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாஸ் இறந்தார். சுரேஷ் சிகிச்சையில் உள்ளார்.விளம்பர பதாகை நிறுவன பொறுப்பாளர், விளம்பர பதாகை அமைத்த நிறுவனம் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை