உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாரல் மழையால் மின்தடை

சாரல் மழையால் மின்தடை

கன்னிவாடி : தருமத்துப்பட்டி, கரிசல்பட்டி, பழைய கன்னிவாடி,கசவனம்பட்டி சில வாரங்களாக பகல்நேர வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் கருமேகம் பரவலாக சூழ்ந்த போதும் சில இடங்களில் மட்டும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. அதே வேளையில் பரவலாக பகலில் அதிக வெப்பமான சூழல் நிலவுகிறது. அனுமந்தராயன்கோட்டை, கரிசல்பட்டி, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, கசவனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக அவ்வப்போது காற்றுடன் லேசான சாரல் மழை உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக மின்தடை வாடிக்கையாக தொடர்கிறது. சாரல் மழைக்கும் மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. பகலில் கடும் வெப்பமும், இரவு நேர மின்தடையும் மக்களை தவிப்பிற்குள்ளாக்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை