உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இன்று போராட்டம்

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இன்று போராட்டம்

வேடசந்துார்,:தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசாணை 243 ஐ ரத்து செய்யக் கோரி இன்று (ஜூலை 3) ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் விவகாரத்தில் அரசாணை 243ஐ தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அரசின் இந்த முடிவால் பெண் ஆசிரியர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். மாநில அளவிலான இடமாறுதல் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆசிரியர்கள் குமுறுகின்றனர். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து கலந்தாய்வு மையங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் பேரமைப்பு மாநில உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளின் சாவியை நேற்று மாலை வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என பேரமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி