உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு உற்பத்தி விலைக்கே மூலப்பொருள் அமைச்சர் சக்கரபாணி தகவல்

கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு உற்பத்தி விலைக்கே மூலப்பொருள் அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம்: கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு உற்பத்தி விலைக்கே மூலப்பொருட்கள் பெற்றுத் தரப்படும் என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.ஒட்டன்சத்திரம் எல்லப்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் மூலம் 31 ஏக்கரில் 169 வீடுகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் பேசியதாவது:கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 8 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்பட உள்ளது. தொகுப்பு வீடுகள் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6328 வீடுகள் கட்டப்பட உள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடு கட்டும் பயனாளிகளுக்கு செங்கல், சிமென்ட், ஜல்லி, எம்சான்ட் உள்ளிட்ட மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் விலைக்கே பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.ஊராட்சி வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் நாகராஜன், தாசில்தார் சசி, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், பி.டி.ஓ., காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை