உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பழனி:பழனி கிரிவீதி ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து திண்டுக்கல் கலெக்டர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, கிரி வீதியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள் நேற்று முன் தினம் அவசரம் அவசரமாக இடித்துத் தள்ளப்பட்டன.பழனி அடிவாரம், கிரி வீதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் இருக்கிறது. கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து திண்டுக்கல் கலெக்டர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து கிரி வீதி அண்ணா செட்டி மடத்தில் உள்ள 160 க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடியிருப்போர் தாங்களாக முன் வந்து வீட்டில் இருந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம், மண் அள்ளும் இயந்திரங்களைப்பயன்படுத்தி வீடுகளை இடித்துத் தள்ளினர். கிரிவீதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் கடைகளும் இடிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை