உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பையால் சுகாதாரக்கேடு; எங்கும் இல்லை வசதிகள் சிரமத்தில் பொதுப்பணித்துறை அலுவலர் குடியிருப்போர்

குப்பையால் சுகாதாரக்கேடு; எங்கும் இல்லை வசதிகள் சிரமத்தில் பொதுப்பணித்துறை அலுவலர் குடியிருப்போர்

திண்டுக்கல்: குப்பைத்தொட்டி இல்லாமல் தேங்கும் குப்பையால் சுகாதாரக் கேடு, தெருக்களில் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு, சாக்கடை இல்லாததால் ரோட்டில் ஓடும் கழிவுநீர் என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் பொதுப்பணித்துறை அலுவலர் காலனி குடியிருப்போர்.திண்டுக்கல் - திருச்சி பைபாஸ் ரோட்டில் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள இக்காலனி குடியிருப்போர் சங்க முன்னாள் தலைவர் அருணாச்சலம், தற்போதைய தலைவர் பிரேம்குமார், பொறுப்பாளர்கள் ரங்கவேல், கண்ணன் கூறியதாவது:குடியிருப்புப் பகுதிக்கு வரக்கூடிய ரோடு முதற்கொண்டு எந்த பகுதியிலும் ரோடுகள் சரியில்லை. பள்ளம் மேடாக உள்ளது. சிறு மழை பெய்தால் கூட நீர் தேங்கி விடுகிறது. போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. சாக்கடைகள் இல்லை. கழிவுநீர் செல்வதற்கான வழித்தடமே இல்லாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக ரோடுகளை ஒட்டியே முட்புதர்கள் வளர்ந்து நிற்பதால் பூச்சிகள், பாம்புகள் வந்துவிடுகின்றன. காலனிக்குள் சென்று வருவோர் ஒருவித அச்சத்துடனே உள்ளனர்.குறிப்பாக குப்பை அள்ளப்படுவதே இல்லை. வீட்டிற்கு வந்தும் குப்பை பெறப்படுவதில்லை. ரோட்டோரங்களில் குப்பை தேங்கி உள்ளது. காலனியையொட்டி அமைந்துள்ள சாமியார் குளம் தான் பெரும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆனால் அதனை முறையாக பராமரிக்காமல் விட்டதால் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. வெளி இடங்களில் இருந்தெல்லாம் வந்து இங்கு குப்பையை கொட்டிச் செல்கின்றனர். தெருவிற்கு 2 பொது குடிநீர் குழாய்கள் இருந்தாலும் தண்ணீர் என்பது வருவதே இல்லை.மாலைக்கு மேல் தனித்தீவு போல் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். கொசு உற்பத்தியும் தாராளமாக உள்ளது. கொசு மருந்து உட்பட எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. இங்குள்ள மேல்நிலைத் தொட்டிகள் பயன்பாட்டில் இருந்தாலும் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுவதில்லைமொத்தத்தில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தனித்துவிடப்பட்ட பகுதியாக பொதுப்பணித்துறை அலுவலர் காலனி உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை