உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை மகனுக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை மகனுக்கு சிறை

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி மானூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் 2022-ல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்தார். அவருக்கு உதவியாக அவரது தந்தை சங்கரும், இருந்துள்ளார். இதையடுத்து பழநி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விக்னேஷ், சங்கர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளிகள் விக்னேஷுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2.20 லட்சம் அபராதமும், சங்கருக்கு ரூ.10 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்