உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதை கூடாரமாக தமிழகம் பா.ஜ., எச்.ராஜா காட்டம்

போதை கூடாரமாக தமிழகம் பா.ஜ., எச்.ராஜா காட்டம்

கோபால்பட்டி: '' தமிழகம் போதை கூடாரமாக உள்ளதாக,'' பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.கோபால்பட்டியில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பா.ஜ., கூட்டத்தில் அவர் பேசியதாவது: சில நாட்களில் மட்டும்130 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தினமும் கொலை நடக்கிறது.இதுதான் ஸ்டாலின் அரசாங்கம். நமக்கு ஒரு சட்ட அமைச்சர் ரகுபதி. அவர் கொலை எல்லாம் நடக்கும் பா என கவுண்டமணி மாதிரி அதெல்லாம் சகஜமப்பா என மந்திரி சொல்றாரு. நீங்க எதுக்கு இருக்கீங்க. அது மட்டும் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஆளுநர் ரிப்போர்ட் அனுப்பினா 24 மணி நேரம் கூட இந்த அரசாங்கம் இருக்காது.இது சபாநாயகர் அப்பாவு,சட்ட அமைச்சர் ரகுபதிக்கு தெரியுமா தெரியாதா. தமிழகம் போதை கூடாரமாக உள்ளது என்றார். பா.ஜ., மாவட்டத் தலைவர் தனபாலன், சமூக ஊட பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கர், மாவட்ட துணைத் தலைவர் வீர ஜோதி, மாவட்டச் செயலாளர்கள் சபாபதி, வேல்முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் வீரராகவன், மாவட்டச் செயலாளர் சேரன் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் செல்லத்துரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி