உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் சாய்ந்து நிற்கும் மரத்தால் விபத்து அபாயம்; மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை

ரோட்டில் சாய்ந்து நிற்கும் மரத்தால் விபத்து அபாயம்; மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை

தாண்டிக்குடி : - தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் சில தினங்களாக சாய்ந்துள்ள மரத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.மலை பகுதியில் இரு வாரமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. சில தினங்களுக்கு முன் கானல்காடு பட்டா நிலத்தில் காற்றிற்கு சாய்ந்த மரம் எதிர் திசையில் இருக்கும் மரத்தில் சாய்ந்தவாறு உள்ளது. இதை கடந்து நாள்தோறும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இம்மரத்தை கடந்தே உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற நிகழ்ச்சிகளுக்கு வருவாய், பிறதுறை அதிகாரிகள் கடந்து சென்றனர். இருந்த போதும் மரத்தை அகற்றாத அவலத்தில் நாள்தோறும் விபத்து அபாயத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலை துறையின் மெத்தனப் போக்கால் தெரிந்தே விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''மரம் சாய்ந்த நிலையில் உள்ளது குறித்து தற்போது தான் தெரிய வந்தது. மரத்தை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை