உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரையில் நேற்று மீண்டும் வெடிச்சத்தம்

வடமதுரையில் நேற்று மீண்டும் வெடிச்சத்தம்

வடமதுரை : வடமதுரை பகுதியில் நேற்று காலை 10:46 மணிக்கு வெடிச்சத்தம் கேட்டது.மீண்டும் மீண்டும் கேட்கும் இச்சத்தம் இம்மாதத்தில் இது மூன்றாவது முறையாகும் .வேடசந்துார், வடமதுரை, சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதியில் பல கி.மீ., சுற்றளவில் வாரங்கள், தினங்கள் இடைவெளியில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் இச்சத்தம் கேட்கிறது. இம்மாதத்தில் 6, 23 ல் வடமதுரை பகுதியில் வெடிச்சத்தம் கேட்ட நிலையில் 3வது முறையாக நேற்றும் இந்த சத்தம் கேட்டது. சத்தம் ஏற்பட்டதும் வீட்டின் ஜன்னல், கதவுகளில் அதிர்வுகளையும் உணர முடிந்தது. அதி பயங்கர சத்தம், அதிர்வு எதனால் ஏற்படுகிறது என்பது மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவொரு விளக்கமும் தரப்படாததால் மக்களிடம் அச்ச உணர்வு தொடர்கிறது. முறையான விளக்கம் தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ