உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பயணிகளை ஏற்றி செல்லாத அரசு பஸ் மறுநாள் வந்த போது மறித்த மக்கள்

பயணிகளை ஏற்றி செல்லாத அரசு பஸ் மறுநாள் வந்த போது மறித்த மக்கள்

வேடசந்துார்: வேடசந்துாரிலிந்து கல்வார்பட்டி ஊராட்சி சிங்கிலிக்காம்பட்டிக்கு அரசு பஸ் தினமும் நான்கு முறை சென்று வருகிறது. இந்த பஸ் நேற்று முன்தினம் சென்று திரும்பிய போது பஸ்சில் ஏற வந்த ஒரு கர்ப்பிணியை ஏற்றி செல்லாமல் விட்டு சென்றது. பஸ்சில் பெண்களுக்கு இலவசம் பெண்களை விட்டு செல்வதாக குற்றச்சாட்டும் உள்ளது. இதில் பொறுமை இழந்த மக்கள் நேற்று காலை சிங்கிலிக்காம்பட்டிக்குள் வந்த அரசு பஸ்சை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.அங்கு வந்த கூம்பூர் போலீசாரோ , முறையான தகவல் தெரிவிக்காமல் பஸ்சை மறித்ததால் மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டமக்களோ, அரசு போக்குவரத்து கழக மேலாளர் வந்தால் தான் போராட்டத்தை முடிப்போம் என கூறியப்படி காத்திருந்தனர்.அதன்படி வேடசந்துார் அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் அசோக் பேச்சு வார்த்தை நடத்தினார். இனிமேல்இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது, அப்படி நடந்தால் எனக்குத் தகவல் தாருங்கள் .சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என கூற கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ