உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 10 ரூபாய் தாள் புழக்கம் குறைந்ததால் வியாபாரிகள் பரிதவிப்பு! 10 ரூபாய் நாணய வதந்தி விடைபெறுவதால் ஆறுதல்

10 ரூபாய் தாள் புழக்கம் குறைந்ததால் வியாபாரிகள் பரிதவிப்பு! 10 ரூபாய் நாணய வதந்தி விடைபெறுவதால் ஆறுதல்

இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய்க்கு குறியீடு அறிமுகம் செய்யும் முன்னரே 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. அதில் இருவித உலோகங்களை பயன்படுத்தி நடுவட்டத்திற்குள் 10 என பொறித்து மேலே 15 கோடுகள் இருந்தன. சில ஆண்டுகள் கழித்து அறிமுகமான இந்திய ரூபாய்க்கான தனி குறியீடு ரூபாய் தாள்கள் நாணயங்களில் அச்சிடப்பட்டது.பின்னர் வெளியான 10 ரூபாய் நாணயங்களில் இருவித உலோக வட்டங்களையும் இணைக்கும் வகையில் '10' என அச்சிட்டு மேலே 15 கோடுகள் இருந்தன. முதலில் ரூபாய் குறியீடு இல்லாமல் வெளியான 10 ரூபாய் நாணயங்கள் போலி என யாரோ கிளப்பி விட்ட வதந்தி திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் பரவியது. இதனால் மக்கள் ஒட்டுமொத்தமாக இருவித 10 நாணயங்களையும் ஒதுக்கினர். அதே நேரம் பக்கத்து மாவட்டங்களில் பரவலாக அனைத்து தரப்பினராலும் ஏற்கப்பட்டது.வதந்தி காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் வீடுகள், கடைகளில் பெருமளவில் முடங்கியது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருவித நாணயங்களும் செல்லுபடியாகும் என அறிவிப்பு வெளியிட்டனர். அரசு பஸ்களில் ஏற்க வேண்டும் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு நோட்டீஸ் ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 10 ரூபாய் தாள்களின் புழக்கம் தற்போது வெகுவாக குறைந்து காணப்படுகிறது. அதே நேரம் போலி நாணய வதந்தியால் முடங்கிய 10 ரூபாய் நாணயங்களின் புழக்கத்தை ஏற்கும் மன நிலைக்கு மக்கள், வியாபாரிகளும் வந்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 29, 2024 05:38

பல மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை மக்கள் வாங்குவதில்லை,


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 10:51

இருபது ரூபாய் நாணயமும் பத்து ரூபாய் போலவே இருக்கிறது. ஒரே குழப்பம்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ