உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பரப்பலாறு அணையில் 111 மி.மீ., மழை

பரப்பலாறு அணையில் 111 மி.மீ., மழை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை மலைப்பகுதியில் 111 மி.மீ., மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 81 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 90 அடியை எட்டுவதற்கு இன்னும் 9 அடி உள்ளது. ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் நேற்று முன் தினம் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் 111 மி.மீ., மழை பதிவாகியது. அணைக்கு வினாடிக்கு 390 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து 30 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அணை இந்தப் பருவ மழையால் இன்னும் ஒருமுறை கூட நிரம்ப வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை