உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆசிரியர் தகுதி தேர்வு ஆயிரத்து 136 பேர் ஆப்சென்ட்

 ஆசிரியர் தகுதி தேர்வு ஆயிரத்து 136 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் மொத்தம் ஆயிரத்து 136 பேர் தேர்வெழுதவில்லை. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வு நவ.15, நவ.16 (நேற்று) 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 490 பேர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 2 ஆயிரத்து 976 பேர் தேர்வு எழுதினர். 514 பேர் எழுதவில்லை. நேற்று (நவ.16) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடந்தது. மொத்தம் 10 ஆயிரத்து 934 பேர் விண்ணப்பித்தனர். 9ஆயிரத்து 798 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 136 பேர் எழுதவில்லை. இந்த தேர்வில் கூடுதல் சலுகை நேரம் கேட்டு 203 பேர் விண்ணப்பித்துள்ளனர். 34 பேர் சொல்வதை எழுதுபவர் கோரி விண்ணப்பித்தனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டது. திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ