திண்டுக்கல்லில் விதிமீறிய 15 வாகனங்கள் பறிமுதல்,அபராதம்
திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதிகளில் விதிமீறிய 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அபராதமும்விதிக்கப்பட்டது.திண்டுக்கல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ரோடு விதிகளை மதிக்காமல் வந்தது,அதிக பாரங்களை ஏற்றி சென்றது,தகுதி சான்று இல்லாமல் வந்தது என 15க்கு மேலான வாகனங்கள்பறிமுதல் செய்யப்பட்டது.அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் விதிகளை மதித்து வாகனங்களில் பயணிக்க வேண்டும்.இல்லையென்றால் வாகனங்கள் பறிமுதலோடு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.