உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  30 ஆண்டு நிறைவு சங்கமம் விழா

 30 ஆண்டு நிறைவு சங்கமம் விழா

திண்டுக்கல்: 1995ல் தமிழக காவல் பணியில் சேர்ந்தவர்கள் 30 ஆண்டு பணி நிறைவையொட்டி ஒன்று கூடுகை சங்கமம் விழா ஒகேனக்கல்லில் நடந்தது. குழுவில் உள்ள 275 பேர் அவர்களின் குடும்பத்தினரோடு கலந்துக்கொண்டனர். இதில் திண்டுக்கல் போலீசாரும் பங்கேற்றனர்.ஆரம்பக்கால குழு துவக்கம், 30 ஆண்டு கால பயணம், பணியின் போது இறந்த 18 நண்பர்களின் இழப்பு, அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை, திருமணம், கல்வி உதவித்தொகை, நினைவு பரிசு வழங்குதல், கவுரவித்தல் என நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை குழு நிர்வாகிகள் சிவகுமார், அர்ஜூனன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்