உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேனீக்கள் கொட்டியதில் 7 பேர் பாதிப்பு

தேனீக்கள் கொட்டியதில் 7 பேர் பாதிப்பு

நத்தம்: லிங்கவாடியை சேர்ந்தவர் மகாராஜன் 45. தனது தோட்டத்து வீட்டில் ஆடுகளை மேயச்சலுக்கு விட்டு விட்டு குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கியது. அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். மகாராஜன் 45, அவரது மனைவி மீனா 39, மகன்கள் மகேஸ்வரன் 10, மாறன் 3, ஆகிய 4 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். சின்னக்காளை 48, அழகுராஜ் 46, கார்த்திகா 39, நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை