உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலை கிராமங்களில் ஒற்றை யானை உலா

மலை கிராமங்களில் ஒற்றை யானை உலா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மலை கிராமங்களில் இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் வனச் சரக பகுதியில் யானைகள், மான்கள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இவை அடிக்கடி தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பெத்தேல்புரம், தட்டைக்குழிக்காடு, புலிகுத்திக்காடு மலை கிராமங்களில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. கண்ணனுார் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கி மூன்று ஆடுகள் பலியான நிலையில் யானை நடமாட்டத்தால் இப் பகுதி கிராமத்தினர் இரவு நேரங்களில் துாங்க முடியாமல் தவிக் கின்றனர். வனத்துறையினர் யானை, சிறுத்தையை வனத்திற்குள் விரட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை