உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலைகளுக்கு கூடுதல் பஸ் : கலெக்டர் உத்தரவு

மலைகளுக்கு கூடுதல் பஸ் : கலெக்டர் உத்தரவு

திண்டுக்கல் : மலைப்பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, போக்குவரத்து கழகத்திற்கு, கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். பஸ் விபத்து தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

அவர் கூறியது: மலைப் பகுதி பஸ்களில் அதிக ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது. கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வதை, போக்குவரத்து கழகம் தடுக்க வேண்டும். பஸ்சின் பிரேக் உட்பட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு விபத்தில்லா பயணித்திற்கு வழிவகுக்க வேண்டும், என்றார். சந்திரசேகரன் எஸ்.பி., பாலபாரதி எம்.எல்.ஏ., போக்குவரத்து கழக பொது மேலாளர் சுப்பையா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி