மேலும் செய்திகள்
பழநியில் குவிந்த பக்தர்கள்
25-Nov-2024
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளதால் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த கூடுதலாக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.பழநி முருகன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தரின் வருகை அதிகரித்து இருக்கும். இந்தாண்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகை உள்ளது. பழநி கோயில் நிர்வாகம் சார்பில் இலவச சுற்றுலா வாகன நிறுத்தங்கள், அருள்ஜோதி வீதி , கிழக்கு கிரிவீதி பகுதியில் மட்டும் உள்ளது. தற்போது ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாகன நிறுத்தங்களின் போதிய இடம் இல்லை. இதனால் அருள் ஜோதி வீதி, பூங்கா ரோடு ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் ,போலீசார் இணைந்து கொடைக்கானல் செல்லும் சாலை அருகே தற்காலிக வாகன நிறுத்தத்தை அமைத்துள்ளனர். ஆனால் அதில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. இரவு நேரங்களில் எரியும் விளக்குகள் மட்டும் உள்ளன. வாகனங்கள் வெளியேறும் பாதை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் இல்லை. மேலும் துாய்மை பணிகள் நடக்காததால் தற்காலிக வாகனம் நிறுத்தம் குப்பைமேடு போல் உள்ளது. இதுன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-Nov-2024