உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இதையும் கவனியுங்க: போலீஸ் ஸ்டேஷன்களில் குப்பையென குவிந்து கிடக்கும் வழக்கு வாகனங்கள்

இதையும் கவனியுங்க: போலீஸ் ஸ்டேஷன்களில் குப்பையென குவிந்து கிடக்கும் வழக்கு வாகனங்கள்

மாவட்டத்தில், 7 சப் டிவிசன்களில் சட்டம், ஒழுங்கு, மகளிர், குற்றப்பிரிவு, மதுவிலக்கு என மொத்தம் 46 போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளது. இந்நிலையில் குற்றம், கடத்தல், திருட்டு வழக்குகளில் பிடிபட்டு கோர்ட் சான்றுக்காக போலீஸ்ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் எண்ணிக்கை பெருகி உள்ளது. சைக்கிள், டூவீலர், கார், வேன், லாரி, டிராக்டர்,ஆட்டோ என சிறிய வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை நுாற்றுக்கணக்கில் கிடப்பில் உள்ளதால் பல போலீஸ் ஸ்டேஷன்கள்இடவசதியின்றி தவிக்கின்றன.10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் கிடக்கும் வாகனங்களின் கூடுகள் சிதைந்து பாதி மண்ணில் புதைந்து நிற்கிறது. பொதுவாக, நீண்டக்காலமாக தேங்கிக்கிடக்கும் வாகனங்களை போலீஸார் பொது ஏலம்விட்டு அரசுக்குவருவாய் ஈட்டுவது வழக்கம். இதனால், பயன்பாட்டுக்கான இடவசதி, துாய்மை உறுதி செய்யப்படுவதுடன்தேவையற்ற பொருட்கள் தேங்குவதும் தடுக்கப்படும்.ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் அதற்கான அரிச்சுவடே இல்லாத அளவுக்கு வாகனங்கள் குப்பையெனகுவிந்துக்கிடக்கிறது. இதனால் அவற்றின் மீது களைச்செடிகள் படர்ந்து புதர்போல் வளருகிறது. இது விஷப்பூச்சிகள் வாழும் புகலிடமாகவும் மாறியுள்ளது. மழைக்காலம் வந்துவிட்டால் கொசுஉற்பத்தி கேந்திரமாவும், சுகாதார சீர்கேட்டை உருவாக்கும்இடமாகவும் மாறிவிடும். மழை, வெயில் என மாறி வரும் இயற்கைச்சூழலில் வாகனங்கள் உருக்குலைந்துவீணாவதற்கு முன்பு அவற்றை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை