உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

எரியோடு: எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997 ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமை வகித்தார். முன்னாள், தற்போதைய ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொங்கல் வைத்து நிகழ்ச்சியை துவக்கி நினைவு பரிசு வழங்குதல், விருந்து உபசரிப்பு, கலை நிகழ்ச்சிகளுடன் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர். 3 வாரங்களுக்கு முன் பள்ளிக்கு நல திட்ட உதவிகளை செய்தது போல் எதிர்காலத்திலும் முடிந்த உதவிகளை செய்வது என தீர்மானித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ