உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாழ் குறைதீர் கூட்டத்தில் முறையீடு

50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாழ் குறைதீர் கூட்டத்தில் முறையீடு

திண்டுக்கல்: குடகனாற்றில் முறையாக தண்ணீர் வராததால் 50ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாழ்படுவதாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிடப்பட்டது. கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 272 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் குழந்தை வளர்ச்சி திட்டம், மாவட்ட திட்ட அலுவலகம் மூலம் பயனாளிகளுக்கு 39 முன் பருவக் கல்வி உபகரணம், தாட்கோ மூலம் சரக்கு வாகனம் வாங்குவதற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். அனுமந்தராயன்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தியப்படி அளித்த மனுவில்,: கீழ்பழநி மலையிலிருந்து வரும் தண்ணீர் குடகனாற்றுக்கு முறையாக வரவில்லை. இதனால் 14ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனம், கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் பாசன வசதி பெறும் நிலங்கள் என 50ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பாறைப்பட்டி, கன்னிமார்கோயில் அருகே குடனாறின் குறுக்கே 7 அடி உயர தடுப்புச் சுவரை கட்டி தண்ணீரைத் தடுத்து வனப் பகுதி வழியாக புதிய நீர்வழிப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புக்கு பொதுப் பணித் துறை, வனத் துறை திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் உடந்தையாக செயல்படுகின்றன . விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள், குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கின்றன. மாவட்ட நிர்வாகம் குடகனாறு தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை