| ADDED : ஏப் 26, 2024 12:32 AM
கொடைக்கானல் : கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்த பெயிண்டர் முனியாண்டி 24. டூவீலரில் பெருமாள்மலைக்கு திரும்பிய நிலையில் சென்பகனுார் பஸ் ஸ்டாப்பில் 3 பேர் பெருமாள்மலை வரை லிப்ட் கேட்டனர். முனியாண்டி மூவரையும் ஏற்றினார். பாதி வழியில் வந்த போது சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறினர். அதன்படி டூவீலரை நிறுத்த, இறங்கியவர்கள் கத்தியால் முனியாண்டியின் தலையில் தாக்கினர். தொடர்ந்து டூவீலரை பறிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிய முனியாண்டி கொடைக்கானல் போலீசில் புகாரளித்தார். அதன்படி மதுரை திடீர் நகரை சேர்ந்த ரித்திஷ்குமார் 16, சிவகார்த்திக் 20,சங்கேஷ்வரன் 19 ,ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.வளைவில் வேன் மீது மோதிய லாரிகுஜிலியம்பாறை:-கரூர் மாவட்டம் குளித்தலை சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் சண்முகம் 29. லாரியில் சேர்வைக்காரன்பட்டி பக்கரையான் காடு எஸ். வளைவில் சென்ற போது எதிரே வந்த சேர்வைக்காரன்பட்டி மேட்டுக்களத்துார் பிரகாஷ் ஒட்டி வந்த வேன் மீது மோதியது. இரு டிரைவர்களும் காயமடைந்த நிலையில் வாகனங்களும் சேதமடைந்தன. லாரி டிரைவர் சண்முகம் மீது குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.கஞ்சா கடத்தியவர்களைவிடுவிக்க கோரி முற்றுகைதிண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த முகமது இர்பான், சேக் அப்துல்லா, முகமது மீரான், அப்துல்லா ஆகியோர் காரில் கஞ்சா கடத்தினர். வடமதுரையில் நடந்த சோதனையில் நால்வரையும் போலீசார் கைது செய்தனர். இதையறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் நால்வரையும் விடுவிக்ககோரி திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை பின் கலைந்தனர்.