| ADDED : டிச 31, 2025 06:04 AM
திண்டுக்கல் டிச 31-: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜன.7ல் திண்டுக்கல் வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜன.7ம் தேதி திண்டுக்கல் வருகிறார். அன்று நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு அரசு திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் சக்கரபாணி ,பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் ஆகியோர் பார்வையிட்டனர். மேடை, முதல்வர் வாகனம் வரும் பாதை, பொதுமக்கள் அமரும் இடம், வாகன நிறுத்தும் இடம் ,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். டி .ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீர்த்தனா மணி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தங்கவேல் கலந்து கொண்டனர்.