உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குழந்தைகள் தின விழா

 குழந்தைகள் தின விழா

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசுநிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி , தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகள் தின விழா, தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது. மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முன்னாள் தாளாளர் அப்துல்முத்தலீப் தலைமை வகித்து கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தாளாளர் ஜாகீர் உசைன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை வர்ஷனி வரவேற்றார். பேகம்சாஹிபா நகரம் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை பாத்திமாமேரி தலைமை வகித்தார். அசனாத்புரம் தொடக்கப்பள்ளியில் பெற்றோர் பெனாசீர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை அம்பிகாதேவி முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்