உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீயணைப்பு பொருள், சுகாதார பணியில் முறைகேடு நிலக்கோட்டை ஒன்றிய கூட்டத்தில் புகார்

தீயணைப்பு பொருள், சுகாதார பணியில் முறைகேடு நிலக்கோட்டை ஒன்றிய கூட்டத்தில் புகார்

நிலக்கோட்டை,: 'பள்ளிகளுக்கான தீயணைக்கும் பொருள், சுகாதார பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக, நிலக்கோட்டை ஒன்றிய கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.நிலக்கோட்டை ஒன்றிய கூட்டம் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடந்தது துணைத் தலைவர் யாகப்பன், பி.டி.ஓ., பத்மாவதி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., பஞ்சவர்ணம் வரவேற்றார்.

கவுன்சிலர்களின் விவாதம் ரூபிசகிலா (தி.மு.க.,): மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சியில் சாக்கடை பணி மேற்கொள்ளாமலே நடந்து முடிந்ததாக கூறப்பட்டுள்ளது .உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வகுமார் (பொறியாளர்):நேரில் ஆய்வு செய்து உரிய தகவல் அளிக்கப்படும்.ராஜதுரை (சுயே.,): நால்ரோடு வணிக வளாக கடைகளை பல ஆண்டுகளாக ஏலம் நடத்த வலியுறுத்தி வருகிறோம். அதிகாரிகள் மீண்டும் புதுப்பித்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.துணைத் தலைவர்: பொது ஏலத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக பரிசளிக்கப்படும்.கணேசன் (சுயே.,): ஒன்றியத்தில் உள்ள 110 பள்ளிக்கூடங்களுக்கு தீயணைக்கும் பொருட்களுக்கென ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் சுகாதார பணிக்காக ரூ. 22.50 லட்சத்தில் பணிகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் முறைகேடு நடந்துள்ளது. அரசின் நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. உரிய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்பி டி ஓ.,: பணிகளில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை