உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக்: ஹரிவர்ணா அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: ஹரிவர்ணா அணி வெற்றி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் ஹரிவர்ணா அணி வெற்றி பெற்றது.திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் டிவிஷன் லீக் போட்டி ஆர்.வி.எஸ்., மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ப்ளேபாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. சசிகுமார் 44 ரன்களும், முகமது அப்துல்லா 4, சந்துரு 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்ணா கிரிக்கெட் கிளப் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிேஷார்குமார் 37, சஞ்சய் வெங்கடேஸ்வர் 27 ரன்கள் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ