உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிலவரி உயர்வு எதிராக ஏப். 22ல் போராட்டம் கிரஷர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

நிலவரி உயர்வு எதிராக ஏப். 22ல் போராட்டம் கிரஷர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

திண்டுக்கல் : ''நிலவரி உயர்வை ரத்து செய்யக்கோரி ஏப். 22ல் கவன ஈர்ப்பு போராட்டம் நடக்க உள்ளதாக '' திண்டுக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 58 கிரஷர், குவாரிகள் செயல்படுகிறது. நேரடியாக 5 ஆயிரம் மறைமுகமாக 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.தமிழக அரசு கொண்டுவந்துள்ள நிலவரி உயர்வால் அனைவரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கட்டட வேலைகள் பாதிக்கப்படும். சிமென்ட் விலையை ஏற்கனவே அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. நிலவரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே ஏப். 22ல் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை