உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்த காட்டு மாடு இறப்பு

கிணற்றில் விழுந்த காட்டு மாடு இறப்பு

நத்தம் : நத்தம் அருகே முளையூர்- நரசிம்மபுரம் மலை அடிவார பகுதியில் தனிநபருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரை தேடி வந்த 10, 8 வயதுள்ள காட்டுமாடுகள் தவறி விழுந்தது. அழகர்கோவில் வனத்துறை சார்பில் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அங்கு சென்ற நத்தம் தீயணைப்பு துறையினர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் கிணற்றில் விழுந்த காட்டுமாடுகளை மீட்டனர். இதில் 10 வயது காட்டுமாடு இறந்தது. மற்றொரு காட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. கால்நடைதுறையினர் இறந்த காட்டு மாடை சோதனை செய்ய வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை