உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் சப்ளை தாமதம்; மாநகராட்சி அறிவிப்பு

குடிநீர் சப்ளை தாமதம்; மாநகராட்சி அறிவிப்பு

திண்டுக்கல் : காவிரி ஆற்றின் வெள்ளம் காரணமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் வரவில் தாமதமாகும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது: காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் உந்துவது நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு தினசரி பெறப்படும் குடிநீர் பெறப்படவில்லை. இத்திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் 2,3,5,6,14,15,16,17,18,19,20,32 வார்டுகளுக்கு காவிரி வெள்ளம் வடிந்து சீரமைப்பு பணிகள் முடிவற்ற பின் குடிநீர் விநியோகிக்கப்படும். ஆத்துார் அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட வேண்டியுள்ளதால் ஆத்துார் குடிநீர் விநியோகம் செய்யப்படும் வார்டுகளுக்கும் குடிநீர் தாமதமாக விநியோகிக்கப்படும். சில பகுதிகளுக்கு மாநகராட்சி லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை