உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

 துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் செய்தும் கொண்டாடினர். ஒட்டன்சத்திரம் : தங்கச்சி அம்மாபட்டி ஊராட்சி இடும்பக்குடும்பன்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் பாலு, துணைச் செயலாளர் முருகானந்தம், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர். நகர தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், அவைத்தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர். வடமதுரை: நகர செயலாளர் கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சேலை, மதிய உணவு வழங்கப்பட்டது. துணை செயலாளர்கள் வீரமணி, அழகுமலை பொறியாளர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் சவுந்தர்ராஜ், சுப்பிரமணி, வேல்முருகன், விஜயா பங்கேற்றனர். சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமையில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. அரசு பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணி, இளைஞரணி அமைப்பாளர் சிவா, மாவட்ட பிரதிநிதிகள் ராமசாமி, சுருளிராஜ் பங்கேற்றனர். - திண்டுக்கல் : பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். மாநகர செயலாளர் ராஜப்பா தலைமை வகித்தார். மேயர் இளமதி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், மாநகர துணை செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் சரவணன் கலந்துகொண்டனர். ம.மு.கோவிலூர், பெரியக்கோட்டை ஊராட்சிகளில் துாய்மை காவலர்களுக்கு வடக்கு ஒன்றியம் சார்பில் வேட்டி,சேலை,இனிப்புகள் வழங்கப்பட்டது. பாலகிருஷ்ணாபுரம்: காட்டுமடம் கிறிஸ்து நகர் ஐ.சி.எம்., இல்லத்தில் முதியோர்களுக்குமதிய உணவு வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமைவகித்தார். பழநி: பழநியில் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. தலா ஒரு கிராம், தங்க மோதிரத்தை வழங்கினர். நகராட்சி சார்பில் அடிவாரம் பகுதியில் இயங்கி வரும் வீடற்றோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது. தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை