உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்று திறனாளிகளுக்கு புது வசதி: அரசு உத்தரவு

மாற்று திறனாளிகளுக்கு புது வசதி: அரசு உத்தரவு

வடமதுரை : பேரூராட்சி பகுதியில் மாற்று திறனாளிகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பேரூராட்சிகள் இயக்குனர் சந்திரசேகர் அனுப்பிய சுற்றிக்கை: பேரூராட்சிகளில் ஆண், பெண் என, தனித்தனியாகவோ, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களுடன் இணைத் தோ, பொது நிதியில் மாற்று திறனாளிகளுக்கு கழிப்பிடம் கட்ட வேண்டும். ஒவ்வொரு பேரூராட்சியிலும் மாற்று திறனாளிகளுக்காக கட்டப்படவுள்ள கழிப்பிடம் அமைய உள்ள இடத்தின் பெயர், சர்வே எண், பரப்பு, மதிப்பீடு; ஏற்கனவே உள்ள கழிப்பிடமாக இருந்தால், அதற்கும் இதே விபரங்களுடன் மதிப்பீடு மற்றும் மன்ற தீர்மானம் சமர்ப்பிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட பேரூராட்சிகளில் மாற்று திறனாளி கழிப்பிட திட்டத்திற்காக, அவசர கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை