உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறப்பு திட்டங்கள் குறித்து ஆலோசனை

சிறப்பு திட்டங்கள் குறித்து ஆலோசனை

திண்டுக்கல் : தமிழக அரசின் சிறப்பு திட்டங்களான இலவச கறவை மாடுகள், ஆடுகள், மிக்சி, கிரைண்டர், லேப்டாப் ஆகியவற்றை செப்., 15 ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைக்கிறார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் செப்., 16 ல் இலவசங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். கிராமங்களுக்கு நேரில் சென்று பயனாளிகளுக்கு வழங்க உரிய இடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. லேப்டாப்களில்பள்ளிகளுக்கே சென்று வழங்க வலியுறுத்தப்பட்டது. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு அடையாளஅட்டை வழங்குதல் மற்றும் அதற்கான உதவிகள் வழங்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் நாகராஜன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில், சிறப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மங்களநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முருகவேல் மற்றும் ஆர்.டி.ஓ., தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை